கண்பார்வை Gun-னு மாதிரி ஷார்ப்பா இருக்க இதை தினமும் சாப்பிடுங்க!

Published by: பிரியதர்ஷினி

தினசரி உணவில் சிட்ரஸ் பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் பார்வையை தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும். இது கண்ணில் ஏற்படும் அழற்சி, வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளையும் சரி செய்கிறது

கீரை, முட்டைக்கோஸ், கீரை, புரோக்கோலி ஆகியவை தவிர சீமை சுரைக்காய், மக்காச்சோளம், பட்டாணி போன்றவற்றையும் கண் பார்வையை மேம்படுத்த எடுத்துக்கொள்ளலாம்

தானியங்களில் உள்ள வைட்டமின் ஈ, ஜிங்க் மற்றும் நியாசின், கண்புரை மற்றும் வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் அபாயத்தைக் குறைக்கிறது

முட்டையிலுள்ள வைட்டமின் ஏ, லூடீன், ஜியாக்சாண்டின் மற்றும் ஜிங்க் சத்து ஆகியவை கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன

மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது வயதாகும் போதுகூட உங்களுடைய கண்களில் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து காக்க உதவும்.

பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு கண் புரை உள்ளவர்களுக்கு பாதாம் செல் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ ஆரோக்கியமான பார்வைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கிறது