என்ன சாப்பிட்டாலும் உடம்பு ஊசி போல இருக்கா? அப்போ இதை முதலில் படிங்க!

Published by: பிரியதர்ஷினி

வெண்பூசணி, உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு, நெய், கடலை, பால், மற்றும் பருப்பு வகைகளை உணவில் நிறைய சேர்த்து உண்டு வந்தாலும் விரைவில் உடல் பருமன் ஆகும்

வெந்தயக் கீரையை வதக்கி பாதாம், கசகசா, கோதுமை இவற்றை சேர்த்து பாலில் அரைத்து, நன்றாக காய்ச்சி நெய்விட்டுக் கிளறி சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்

வேப்பம் பூவை சுத்தம் செய்து தேனில் ஊற வைத்து குல்கந்து போல செய்து அதை இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலில் சதைப் பிடிப்பு ஏற்படும்

குருணை அரிசியுடன் கொள்ளையும் சேர்த்து கஞ்சியாக வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் எடை அதிகரிக்க செய்யும்

இரவில் பால், பேரிச்சம்பழம், பச்சை வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் உடல் எடை அதிகரிப்பதை காணலாம்

பலா சுளையை நெய் அல்லது தேனில் தோய்த்து சாப்பிட்டு அத்துடன் பாலும் அருந்தி வர விரைவில் உடல் பருமனாகும்

பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை தேனில் ஊறவைத்து இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தாலும் உடல் பருமனாகும்

காய்ச்சிய பசும்பாலில் சம்பங்கி பூவை சேர்த்து குடித்து வர, ஒல்லியான தேகத்தில் சதை பிடிக்க ஆரம்பிக்கலாம்