ஃப்ரிட்ஜில் வைத்தும் தோசை மாவு, தயிர் புளித்துவிடுகிறதா? இதோ டிப்ஸ்!
abp live

ஃப்ரிட்ஜில் வைத்தும் தோசை மாவு, தயிர் புளித்துவிடுகிறதா? இதோ டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

மாவை ஒன்றாக அரைத்து பெரிய பாத்திரத்தில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். எல்லா மாவிற்கும் உப்பு சேர்க்க வேண்டாம்.

abp live

பயன்படுத்தும்போது எடுக்கும் கொஞ்ச மாவில் மட்டுமே உப்பு போட்டு பயன்படுத்தவேண்டும். மொத்தமாக உப்பு போட்டால் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்துவிடும்.

abp live

மாவு வைத்திருக்கும் பாத்திரத்தின் மீது வெற்றிலைகளை காம்போடு சேர்த்து வைக்கவேண்டும். வெற்றிலையின் காரம் மாவை புளிக்க விடாமல் தடுக்கும்.

மாவை புளிக்க விடாமல் செய்ய கற்பூரவல்லி எனப்படும் ஓமவல்லி இலையும் நமக்கு உதவும்.

வெயில் காலத்தில் பெரும்பாலும் தயிரை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது.

பால் காய்ச்சிய அதே பாத்திரத்தில் உறை ஊற்றுவதுதான். அது சரியான முறை அல்ல. வேறு பாத்திரத்தில் மாற்றிதான் ஊற்ற வேண்டும்.

இன்னொன்று பாலை அதிக சூட்டிலோ, குளிர்ந்த நிலையிலோ ஊற்றுவதும் ஒரு பிரச்சனைதான். அதற்கென மிதமான சூட்டில் உறை ஊற்றுவதே சிறந்தது.