ஒவ்வொரு வீட்டிற்கும் சமையலறை இதயம் போன்றது. இங்கேதான் உணவு தயாரிக்கப்படுகிறது. இந்த இடம் பொருட்கள் சரிவர அடுக்கி வைக்காமல் இருந்தால், சாதாரண சமையலும் கூட குப்பையாக மாறும் வாய்ப்பு உள்ளது.
சமையலறை உங்களுக்கு எரிச்சலையும் விரக்தியையும் தரும். உணவு தயாரிப்பது தேவையற்ற வகையில் கடினமாக்கும். சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட இடம் மிகவும் இனிமையான மற்றும் மகிழ்ச்சிகரமான சமையல் அனுபவத்தை உருவாக்கும்.
எதையும் மாற்றுவதற்கு முன், உங்கள் சமையலறையை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். உங்கள் வழக்கத்தை அறிந்த பிறகு, அதை சரிசெய்வது எளிதாக இருக்கும்.
சமையலறையில் தேவையில்லாத அனைத்தையும் நீக்கிவிடுங்கள். உடைந்த பாத்திரங்கள், பழைய கொள்கலன்கள், காலாவதியான பொருட்கள், தேவையற்ற இடத்தை ஆக்கிரமிக்கும் பொருட்களை நீக்கிவிடுங்கள்.
உங்கள் சமையலறையை சமையல் செய்யும் இடம், காய்கறிகள் வெட்டும் இடம், சேமிக்கும் இடம், சுத்தம் செய்யும் இடம் என பிரித்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு தேவையானவை எப்போதும் எங்கு தேவையோ அங்கு இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். வேலையை குறைக்கும்.
ஒவ்வொரு ஜாடி, பெட்டி, கொள்கலனுக்கும் பெயர்கள் மற்றும் தேதிகளுடன் லேபிள் செய்யுங்கள். தெளிவான லேபிளிங் உங்களுக்கு பொருட்களை உடனடியாக அடையாளம் காண உதவும். அலமாரிகளை சுத்தமாக வைத்திருக்கும். சமையல் செய்யும் போது சிரமம் இருக்காது.
அடுப்புக்கு அருகில் மசாலா ரேக் வைத்திருப்பதால் சமையல் எளிதாகவும் வேகமாகவும் முடியும். மசாலாப் பொருட்களை ஒரே இடத்தில் ஒழுங்காக வைத்தால் எல்லாமே கிடைக்கும்.
அலமாரிகளின் மேல் இடத்தை பயன்படுத்துங்கள். கொக்கிகள், அலமாரிகள், சுவர் ரேக்குகளை ஏற்படுத்துங்கள். இவை பொருட்கள் வைக்கும் இடத்தை அதிகரிக்கும். பாத்திரங்கள், சமையல் உபகரணங்கள், அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் அலமாரிகள் மற்றும் மேஜைகளில் தினசரிப் பொருட்களை எளிதில் அணுகக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கவும். சமையலறையில் குறைவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களை மேல் அல்லது கீழ் பகுதியில் சேமிக்கவும்.
நீங்கள் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், சிற்றுண்டிகள் மற்றும் மீதமுள்ள உணவை வெவ்வேறு பிரிவுகளில் வைப்பது முக்கியம். இது குளிர்சாதன பெட்டியின் சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. உணவு புதியதாக இருக்க உதவுகிறது. உணவு தயாரிப்பதை துரிதப்படுத்துகிறது.