எப்படிப்பட்ட அவமானத்தில் இருந்தும் மீண்டு வர டிப்ஸ்! “வாழ்க்கைன்னா சில அடிகள் விழதான் செய்யும்” என்பது போல, சில சமயங்களில் எதிர்பாராத விதமாக நாம் அவமானப்படுத்தப்படலாம் அவமானங்களைந் தாண்டினால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியின் உச்சத்தை அடைய முடியும் அவமானம் என்பது நம் மனதை மிகவும் பாதிக்கும் ஒன்று. இதனால் மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் உடற்பயிற்சி செய்வது மூலமாக உடலையும், மனதையும் திடப்படுத்தி அவமான உணர்வுகளை விலக்கி வைக்க முடியும் அவமானம் நம் நம்பிக்கையை உடைக்கக்கூடியது ஆனால், நம் மீது கொண்ட நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது எவ்வளவு அவமானம் அடைந்தாலும் நம்மிடம் உள்ள திறமைகள், வலிமைகளை நினைத்துப் பார்த்து மீண்டு வர வேண்டும் அவமானம் அடைந்தால் ஓடி ஒளியாமல், நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுங்கள் புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை நோக்கி உழைக்கத் தொடங்குங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்பதை நம்பி முன்னேறிச் செல்லுங்கள்