'Flax Seeds' ஜெல் தயாரிப்பது எப்படி?
கோடை வெயிலை சமாளிக்க, ஆளிவிதை ஜெல் பயன்படுத்தலாம்.
சருமத்துக்கு ஊட்டமளித்து, ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
ஆளிவிதை ஜெல் சருமத்திற்கு மட்டும் அல்லாமல் தலைமுடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.
அரை கப் ஆளி விதைக்கு, 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ’ஜெல்’ ஆக மாறிய பிறகு அதை ஆறவைக்கவும்.
இந்த ஜெல்லை ஒரு பாட்டிலுக்கு மாற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
ஆளிவிதை ஜெல்லை முகம், கழுத்து என தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதோடு, சருமத்தின் லேயர்களில் உள்ள மாசுகளை அகற்றும்.
இதை தலைமுடி ஆரோக்கியமாக இருக்க ஹேர்பேக்காகவும் பயன்படுத்தலாம்.
ஆளி விதை ஜெல்லை மற்ற ஃபேஸ் பேக் உடன் சேர்த்து பயன்படுத்தலாம்.