abp live

'ஒன் மினிட்’ சேலை உருவாக்குவது எப்படி?இதோ டிப்ஸ்!

Published by: ஜான்சி ராணி
abp live

சந்தையில் கிடைக்கிறது 'ஒன் மினிட் புடவைகள்'. இவற்றை ரெடிமேட் புடவைகள் என்று அழைக்கிறார்கள்.
இதை உருவாக்குவது எப்படி

abp live

சிபான், பட்டு, காட்டன் என எவ்வகையான சேலையாக இருந்தாலும்ரெடிமேட் சேலையாகத் தைத்தால் விழாக்களுக்கு சட்டென தயாராக முடியும்

abp live

முந்தானைப் பகுதி எவ்வளவு நீளமாக இருக்க வேண்டுமோ அதை அளந்து, மடிப்புகள் வைத்து அவை கலையாதவாறு ஊக்கு குத்திக் கொள்ளுங்கள்.

abp live

மார்புப் பகுதியில் சேலை மடிப்புகள் எவ்வளவு அகலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். இப்போது முதல் மடிப்பை உட்புறமாக திருப்பிக் கொண்டு, எல்லா மடிப்புகளையும் சேர்த்து அந்தப் பகுதியில் ஒரு தையல் போட்டுக் கொள்ளுங்கள். தையல் உள்பக்கமாக இருப்பதால் வெளியில் தெரியாது.

abp live

முன் பகுதியில் கொசுவம் வைப்பதற்காக 'ப்ளீட்ஸ்' எடுத்து வரிசைப் படுத்திக்கொள்ளுங்கள்

abp live

அந்த மடிப்புகளை விசிறி போன்று சிறு இடை வெளியுடன் வருவதுபோல அடுக்கிக் கொள்ளுங்கள்.

abp live

கொசுவ மடிப்புகளை எந்த அளவிற்கு உள்ளே சொருகுவீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

abp live

அந்த அளவிற்கு எல்லா மடிப்புகளையும் சேர்த்து ஒரு தையல் போடுங்கள்.

abp live

அவ்வளவுதான், உங்களுடைய 'ஒன் மினிட் சேலை' ரெடி. உங்கள் உடல்வாகிற்கு ஏற்ப நீங்களே தயார் செய்திருப்பதால், உங்களுக்கு இவ்வகை சேலை அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
வீட்டில் தையல் இயந்திரம் இல்லாதவர்கள், இதே முறையில் கைகளால் தைத்துக்கொள்ளலாம்.