பிற மொழிகளை கற்றுக்கொள்வது ஏன் நல்லது?
தாய்மொழியில் மட்டுமே தெளிவாக சிந்திக்கவும், கருத்துக் களை இயல்பாக வெளிப்படுத்தவும் முடியும். அதேநேரம் மற்ற மொழிகளை கற்பதும் அவசியமானதாகும்.
பல்வேறு கலாசாரங்களையும், வரலாறுகளையும் தெரிந்துகொள்ள முடியும். பலதரப்பட்ட மக்களோடு பழக முடியும்.
பிற மொழிகளை கற்றுக்கொள்வதால், புதிய இடங்களுக்குச் செல்லும்போது அங்குள்ள மக்களி டம் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.
ஒருவருடன் அவரது தாய் மொழியில் தொடர்புகொள்வது, அவருடைய நட்பை மேலும் உறுதிப்படுத்தும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் பல்வேறு வாய்ப்புகளையும் பெற்றுத்தரும்.
நினைவாற்றல் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் களை வளர்த்துக்கொள்ள முடியும். ஒரு புதிய மொழியை தெரிந்துகொள்வதும், அதில் சரளமாக பேசி தொடர்புகொள்வதும் தயக்கத்தை போக்கி, உங்களுடைய சுயமதிப்பை மேலும் அதிகரிக்கும்.
புதிய மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் மனதை சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
இது மூளையில் உள்ள மொழிக்கான மையங்களை விரிவுபடுத்தும். புதிய மொழிகளை கற்கும் பயிற்சி, மூளை நரம்புகளை புத்துணர்வு அடையச் செய்யும்.
பன்மொழியில் புலமை பெற்றிருக்கும் பெண்கள் தாங்கள் குழந்தைகளுக்கும் அவளிருகளித்தாகா கற்பிக்க முடிபும். மற்ற மொழிகளை கற்றுக்கொள்வது, தங்கள் குழந்தைகளுக்கு பல்வேறு கலாசாரங்களையும், பழக்க வழக்கங்களையும் அறிமுகப்படுத்த உதவும்.
பிறமொழி திறன், கூடுதல் வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும். சுயதொழில் மற்றும் வியாபாரத்தை வளர்க்க உதவும். பல மொழிகள் அறிந்த வல்லுநர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச நிறுவனங்கள், பல மொழி அறிந்த வல்லுநர் களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.