மற்றவர்களுக்கு உங்களை பிடிக்க வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

ஒரு சில நபர்கள் எந்த விதமான ஒப்பனைகளும் செய்யமாட்டார்கள்

ஆனால் அவர்களை பார்த்தவுடன் ஏதோ ஒரு விஷயம் ஈர்க்கும். அதற்கு அவர்களின் தனித்துவமான உடல் மொழியும்தான் காரணம்

மற்றவர்களை ஈர்க்க, முதலில் அவர்களிடம் பேசும் போது, உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறி விட வேண்டாம்

உங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றிக்கொண்டே இருக்கும்

நாம் நின்று பேசும் தோரணையும் கூட, நம்மை குறித்த ஒரு பிம்பத்தை பிறர் மனதில் ஏற்படுத்தும்

ஆள் பாதி ஆடை பாதி என்பது கேள்விப்பட்டு இருப்பீர்கள்

நாம் எப்படிப்பட்டவர் என்பதை நமது ஆடைகளும் பிறருக்கு காண்பித்து கொடுக்கும்

எப்போதும் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை பார்த்து பேசவும்

உரையாடும் போது, நீங்கள் மட்டுமே பேசாமல் அவர்கள் பேசுவதையும் கேட்கவும்