கருவளையமா? கவலை வேண்டாம்.. இந்த டிப்ஸ் வொர்க் - அவுட் ஆகும்! கருவளையம் என்பது இன்று பலரின் முகத்தில் காணப்படுகிறது சிறுநீரகப் பிரச்சனை, தூக்கமின்மை, என பல காரணங்களால் கருவளையம் உண்டாகலாம் வெள்ளரியை வட்டமாக வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கருவளையம் நீங்கலாம் வேலை நேரத்தில் அதிகம் தண்ணீர் குடிப்பதும் உடலுக்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது பயன்படுத்திய டீ பேகை கண்களுக்கு கீழே வைத்து கருவளையத்தை அகற்றலாம் கஸ்தூரி மஞ்சள் தூள், தேன் கலந்து கண்களுக்கு கீழே பூசிவந்தால் நல்ல பலன் கிடைக்கும் பழச்சாறு, இளநீர், மோர் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் உடல் சூடு மட்டுமின்றி கண்களில் உஷ்ணமும் குறையலாம் இதனால் அரிப்பு, எரிச்சல், கண்களில் கட்டி போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும் இரவில் அதிக நேரம் கண் விழிக்காமல் இருப்பது, மனதை ரிலாக்ஸாக வைப்பது போன்றவற்றை உதவலாம்