தலைமுடி அதிகமா உதிர்கிறதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க...!
Published by: பிரியதர்ஷினி
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தலை முடியின் ஆரோக்கியத்தை நம்மால் காக்க முடியும்
கரிசாலை இலை, காய்ந்த நெல்லிக்காய், அதிமதுரம் மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து காய்ந்த பின் குளித்து வர முடி உதிர்தல் குறையலாம்
பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து கடாயில் சேர்த்து காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்
தலைமுடி எப்போதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு, உணவில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
செம்பருத்திப் பூவில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி பேஸ்டாக அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தலை தடுக்கலாம்
சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு பிழிந்து முடி கொட்டிய இடத்தில் தடவி அரை மணி நேரத்தில் குளித்து வந்தால் முடி உதிர்தலை குறைக்கலாம்
க்ரீன் டீயில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளதால் அது முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும்
பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இல்லையெனில் சுத்தமான தேங்காயெண்ணெய் ஏதாவது ஒன்றை எடுத்து விரல்களால் தடவி இலேசாக மசாஜ் செய்து அழுத்தமும் கொடுக்கவும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் சீராகும்