அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க! முக அழகு என்பது பொலிவான சருமத்தில் மட்டும் இல்லை உதடு, மூக்கு, புருவம் என பலவற்றிலும் இருக்கிறது புருவங்களில் பொடுகு பிரச்சனை இருந்தால், உங்கள் புருவங்களில் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கலாம் எலுமிச்சம் பழச்சாற்றை நேரடியாக புருவத்தில் தடவாமல், தண்ணீரில் கலந்து தடவலாம் ஆலிவ் எண்ணெய் புருவங்களுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது தேங்காய் எண்ணெயில் ஆலிவ் எண்ணெயை கலந்து தடவலாம் ரோஸ் வாட்டரில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயை கலந்து புருவங்களில் தடவலாம் கற்றாழை ஜெல்லில் பல நல்ல நொதிகள், வைட்டமின் ஈ உள்ளது. இவை முடி வளர்ச்சியை தூண்ட உதவும் கற்றாழை செடியில் உள்ள ஜெல்லை பிரித்தெடுத்து புருவங்களில் தடவலாம் வெங்காயச் சாறில் சல்பர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன இதன் சாறை தடவி, 15 - 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்