முகத்தை எப்போதும் பிரகாசமாக வைக்கணுமா? டிப்ஸ் இதோ!

Published by: பிரியதர்ஷினி

முகத்தை எப்போதும் பிரகாசமாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

தயிர் மற்றும் தேனை சம அளவிற்கு எடுத்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் பசை நீங்கலாம்

இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து முகத்தில் மசாஜ் செய்தால் கருமை நிறம் குறையலாம்

தினமும் மூன்று அல்லது நான்கு முறை குளிர்ந்த நீரில் சோப்பு போடாமல் முகத்தை கழுவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பொலிவாகலாம்

தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர்ந்த பிறகு தண்ணீரில் கழுவினால் சருமம் மிருதுவாகும்

அரிசி மாவு, தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி 5 நிமிடம் ஊறவைத்து, பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்

தோசை மாவோடு முல்தானி மெட்டியை சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகம் அழகாகும்