பூப்போன்ற முகம் வேண்டுமா? இதை வைத்து ஃபேஷியல் பண்ணுங்க!

Published by: பிரியதர்ஷினி

ரோஜாப் பூ ஃபேசியல்

ரோஜாப் பூவை அரைத்து 4 டீஸ்பூன் வெந்தயப் பொடி, 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் காயவைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாகும்

செம்பருத்திப் பூ ஃபேசியல்

செம்பருத்திப் பூவை அரைத்து 3 டீஸ்பூன் பாசி பயிறு மாவு, தேவையான அளவு பால் சேர்த்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்

குங்குமப்பூ ஃபேசியல்

10 குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகம் பளபளப்பாகும்

ஆவாரம் பூ ஃபேசியல்

ஆவாரம் பூவை அரைத்து ஒரு டீஸ்பூன் கசகசா, தேவையான அளவு பசும் பால் சேர்த்து முகத்தில் தடவி கழுவி வந்தால் கருமை நிறம் நீங்கலாம்

மகிழம் பூ ஃபேசியல்

மகிழம் பூவை சிறிதளவு நீர் ஊற்றி அரைத்து அப்படியே முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் குறையலாம்