உங்களுக்கு வீட்டுத்தோட்டம் இருக்கா? செடிகள் செழிப்பாக வளர டிப்ஸ் இதோ!

Published by: பிரியதர்ஷினி

வீட்டில் செடி வளர்ப்பது பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக பூச்செடிகள், வீட்டிற்கு தனி அழகை கொடுக்கும்

கடையில் வாங்கி வரும் செடிகளை வீட்டில் நடும்போது அது வளரவே வளராது. இந்த பதிவில், பூக்கள் செழிப்பாக வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

வீட்டில் வளரும் செடிகள் நன்றாக வளர இந்த கரைசல் உரத்தை பயன்படுத்தலாம்

இதற்கு 50 கிராம் காய்ந்த வேர்க்கடலை, 50 கிராம் கடுகு தேவைப்படும். இதை மிக்ஸியில் போட்டு பவுடர் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்

இந்த கலவையை 5 லிட்டர் தண்ணீரில் மிக்ஸ் செய்துக்கொள்ள வேண்டும். இதை அப்படியே 10 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும்

இதை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளில் ஊற்றலாம். பூச்செடி மட்டுமல்லாமல் எந்த வகை செடி என்றாலும் செழிப்பாக வளரும்

இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வீட்டு தோட்டத்தில் நல்ல மாற்றம் தெரியும்