அலுவலகத்திற்கு செல்பவர்களுக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கு நேரமே கிடைக்காது இவர்கள் வேலைக்கு செல்வதற்கு முன்னும் பின்னும் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி சிறிய வேலையை செய்யலாம் முடிந்த அளவு பொருட்களை எடுத்த பிறகு, மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் வார இறுதியில் பெரிய பெரிய வேலைகளை செய்யலாம் வாரத்திற்கு ஒரு முறை வீடு துடைக்கலாம், கழிவறை குளியலறை ஆகியவற்றை சுத்தம் செய்யலாம் சுத்தம் செய்யும்போது பாடல் கேட்டுக்கொண்டு செய்தால் அலுப்பு தெரியாது வார இறுதியில் சலவை செய்ய வேண்டிய துணிகளை தனியாகவே சேமிக்க வேண்டும் உணவு சாப்பிடும் பாத்திரங்களை உடனே கழுவி விட வேண்டும் பயன்படுத்தாத பொருட்களை தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைக்க வேண்டும் தேவையற்ற பொருட்களை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும்