உடலில் அதிகப்படியான தண்ணீர் தேங்கி இருந்தால், உப்புசம், தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்

தண்ணீரை உடலில் தக்கவைக்கும் சோடியம் கொண்ட உணவுகளை தவிர்க்கலாம்

வாழைப்பழம், அவகேடோ போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்

வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்

தினசரி வாழ்க்கையில், உடற்பயிற்சி செய்வதை உறுதிப்படுத்துங்கள். அப்போதுதான் வியர்வை வெளியேறும்

நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், உடலில் நீர் சேரும்

அன்றாட உணவில் வெள்ளரி, தர்பூசணி போன்ற டையூரிடிக் உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்

யோகா, தியானம் செய்து மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்

தினமும் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்