சருமம் பளபளப்பாக மின்னுவதற்கு கீழே காணும் உணவுகளை சாப்பிட வேண்டும்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/oxygenceuticals

பசலைக்கீரை

ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ பசலைக்கீரையில் உள்ளது. இது ப்ரீ ரேடிக்கல்களுடன் போராடி சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்கிறது.

Image Source: Canva

சிவப்பு திராட்சை

சிவப்பு திராட்சை சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ரெஸ்வெராட்ரோல் உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்கும்.

Image Source: Canva

சூரியகாந்தி விதைகள்

வைட்டமின் ஈ, ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்பு இந்த சூரியகாந்தி விதைகளில் அதிகளவு உள்ளது. சருமத்தை இளமையாக பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

மீன்கள்

ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த டுனா, சாலமீன் போன்ற மீன்கள் சருமம் வறட்சியாகாமல் தடுக்கிறது. சுருக்கங்கள் வராமல் இது தடுக்கிறது.

Image Source: Canva

அவகேடா

ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் ஈ, ஆரோக்கியமான கொழுப்பு இந்த அவகேடாவில் உள்ளது. இது சருமத்தை பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைக்கிறது. இது சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமானது. பீட்டா கரோட்டின் அதிகளவு உள்ளது. தேவையான நீரேற்றத்தை அளித்து சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.

Image Source: Canva

தக்காளி

தக்காளி ஏராளமான நன்மைகள் கொண்டது. இது சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. இதில் லைகோபீன் உள்ளிட்ட ஆக்சிஜனேற்றிகள் உள்ளது.

Image Source: Canva

பீட்ரூட்

சரும பராமரிப்பில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கனிமங்கள், ஆக்சிஜனேற்றிகள், வைட்டமின்கள் அதிகளவு உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்கும்.

Image Source: Canva

எலுமிச்சை, ஆரஞ்சு

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகளவு உள்ளது. இது சருமத்தை பிரகாசமாக்குகிறது.

Image Source: Canva

கேரட்

ஆன்டி ஆக்சிடன்கள், பீட்டா கரோட்டின் கேரட்டில் அதிகம் உள்ளது. இது சருமத்தை பளபளப்பாக்கவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கிறது.

Image Source: Canva