புதியதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் தங்கள் உடல்நலத்திற்காகவும், குழந்தையின் ஆரோக்கியத்திற்காகவும் கீழே உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/factsbaby

நன்றாக தண்ணீர் குடியுங்கள்

உடல் அசதி, சோர்வைத் தடுப்பதற்காக நிறைய தண்ணீர் குடியுங்கள். 8-10 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். மேலும், பழச்சாறு, மூலிகை தேநீர் குடித்தும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்

Image Source: Pinterest/freepik

அதிக புரதச்சத்து தேவை

புரதச்சத்து நிறைந்த உணவுகள் கட்டாயம் தேவை. பருப்பு, முட்டைகள், நட்ஸ் உள்ளிட்ட பொருட்களை உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Image Source: Pinterest/shakyatrading

இரும்புச்சத்து அவசியம்

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும். கீரை, சிவப்பு இறைச்சி, பீன்ஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Image Source: Pinterest/InspiredHealthNaturally

கால்சியம்

புதியதாக குழந்தை பெற்ற பெண்கள் கால்சியம் சத்துள்ள உணவுகள சாப்பிட வேண்டும். பால், கீரைகள், பாதாம் ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்பு, பற்களை வலுப்படுத்தும்

Image Source: Pinterest/gronzilla

வைட்டமின் சி தேவை

குடைமிளகாய், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரும்புச்சத்தை தரும் ஆற்றல் வல்லது.

Image Source: Pinterest/livestrongcom

ப்ரோபயடிக்

செரிமானத்தை சீர்செய்யவும், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் புரோபயோடிக்குகள் அவசியம். தயிர் உள்ளிட்டவற்றில் புரோபயோடிக்குகள் உள்ளது.

Image Source: Pinterest/healthiersteps

சமச்சீர் உணவு

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க சமச்சீர் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். சில மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள்.

Image Source: Pinterest/vecteezy

நார்ச்சத்து உள்ள உணவுகள்

பிரசவத்திற்கு பின்பு உடல்நலம் தேறுவதற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்டவைகளை சீராக சாப்பிட வேண்டும்.

Image Source: Pinterest/deepakdesigner94

பதப்படுத்தப்பட்ட உணவு நோ

அதிகப்படியான காஃபின், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது பிரசவத்திற்கு பின் இந்த உணவுகள் ஆரோக்கியமற்றது.

Image Source: Pinterest/everydayhealth