தமிழ்நாட்டின் அடையாளம் பொங்கல் பண்டிகை. தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
கர்நாடகாவின் அடையாளமாக இந்த மைசூர் தசரா உள்ளது. மகிஷாசூரனை சாமுண்டீஸ்வரி வென்றதன் அடையாளமாக கொண்டாடப்படுகிறது இந்த திருவிழா.
மலையாளிகளின் அடையாளமாக இந்த ஓணம் பண்டிகை உள்ளது. 10 நாட்கள் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது.
கன்னடர்களின் அடையாளங்களில் ஒன்றாக இந்த ஹம்பி திருவிழா உள்ளது. பொம்மலாட்டம், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுடன் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
கேரளாவின் திருச்சூரில் நடக்கும் இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது. யானைகள் அணிவகுத்து நிற்க அங்குள்ள சிவபெருமானின் வடக்குநாதன் கோயிலில் இந்த திருவிழா நடக்கும்.
மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழா இந்த சித்திரை திருவிழா. மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகம் மிகவும் பிரபலம். மகாமகம் குளத்தில் நீராட பக்தர்கள் குவிவார்கள்.