தொப்பை குறைக்க உதவும் வெயிட் லாஸ் சப்பாத்திகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

தொப்பையை கரைக்க, உடற்பயிற்சியோடு, நாம் சாப்பிடும் உணவும் முக்கிய பங்கு வகிக்கிறது

புரதம் நார்ச்சத்து அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் உள்ள உணவுகள், உடல் பருமனை குறைக்க உதவும்

சப்பாத்தி என்பது வட இந்திய உணவு என்ற நிலை மாறி, இப்போது தென்னிந்திய உணவுகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது

கோதுமை மாவிற்கு பதிலாக கேழ்வரகு என்னும் ராகி மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்

வைட்டமின்கள் நிறைந்த கம்பு, செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவும்

சோள மாவு செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்து ரத்த சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது

தினை மாவு உடல் எடையை குறைப்பதோடு முதுமையினால் ஏற்படக்கூடிய மூளை பாதிப்புகளையும் தடுக்கும் திறன் கொண்டது

ஓட்ஸ் இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இருக்க உதவும்

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்