காலில் செருப்பு போடாமல் நடப்பதற்கு “earthing-grounding” என்று ஆங்கிலத்தில் பெயர் உண்டு.
மனதளவில் பலவித நல்ல வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
நரம்பு மண்டலம் சீராக செயல்பட வைக்க உதவுகிறது.
காலுக்கு கீழ் பூமியை உணர்வதால், வேறு எதையும் நினைப்பதை விட்டுவிட்டு கவனத்துடன் இருக்க உதவுகிறது.
உடலை இயற்கையுடன் இணைத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகுக்கும் எனக் கூறப்படுகிறது.
மனசோர்வை நீக்க வெறும் காலுடன் தரையில் நடக்கலாம்.
புல்வெளியில் நடந்தால் மனமும், மனநிலையும் மேம்பட்டு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க உதவும்.