தினமும் காலையில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லதா?

Published by: ஜான்சி ராணி

காலை உணவுவோடு ஒரு க்ளாஸ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. காலை உணவோடு சாப்பிடவில்லை என்றாலும் பிரேக் நேரத்தில் ஜூஸ் அல்லது பழங்கள் குடிப்பது மிகவும் நல்லது.

கேரட், பீட்ரூட், கீரை வகைகளில் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.

கேரட் ஜூஸ் காலை குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கேரட் பல அத்தியாவசிய வைட்டமின், மினரல், ஆண்டி- ஆக்ஸிடன் நிறைந்தது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.

வைட்டமின் ஏ இருப்பதால் இது கண் பார்வையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

காலையில் கேரட் ஜூஸ் குடிப்பதால் அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் தரும்.

ஹைட்ரேட்டடாக இருக்க கேரட் ஹூஸ் உதவும். சர்க்கரை சேர்க்காமல் ஜூஸ் செய்வது நல்லது.

கேரட் ஜூஸ் உடன் புதினா, எலுமிச்சை, இஞ்சி சிறிதளவு சேர்த்து செய்து அருந்தலாம்.

சரும பராமரிப்பிற்கு உதவும். வைட்டமின் கே பொட்டாசியம், ஆல்பா கரோட்டீன் உள்ளிட்டவை நிறைந்தது.