முடிக்கு கொதிக்கும் அளவில் உள்ள சூடான எண்ணெய்யை எப்போதும் பயன்படுத்த கூடாது
எனவே முடி சேதமடையாமல் இருக்க மிதமான சூடு உள்ள எண்ணெயை பயன்படுத்தலாம்
தலைக்கு குளித்து விட்டு ஈரமான முடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது இல்லை. ஈரமான முடியில் கை வைத்தாலே, பலருக்கும் முடி உதிர்வு ஏற்படும்
ஈரமான தலையில் எண்னெய் வைத்தால் ஒரு சிலருக்கு தலைவலி ஏற்படும்
தலை முடி ஈரமாக இருக்கும் போது இறுக்கமாக கட்டி கிளிப் அல்லது கொண்டை போட வேண்டாம்
கண்டிப்பாக இரவு தூங்கும் முன்பு முடிக்கு எண்ணெய் வைக்க வேண்டாம். இதன் காரணமாக முகப்பரு, கண்களில் எரிச்சல் போன்றவை ஏற்படலாம்
ஷாம்பு போடுவதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பு தலைமுடிக்கு எண்ணெய் வைத்தால் போதும்
மேலும் முடிக்கு அதிகமாக எண்ணெய் தடவ கூடாது. அதிகமாக தடவும் போது அழுக்கு படிந்து, முடி க்ரீஸ் போல் மாறிவிடும்
முடியின் ஆரோக்கியத்திற்கு சிறிது அளவு எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. எனவே, முடிக்கு எண்ணெய் வைக்கும் போது கம்மியான அளவில் வைக்கலாம்