குழந்தைகள் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதை தடுக்க டிப்ஸ்!

Published by: பிரியதர்ஷினி

வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாவதை தடுப்பதற்கு என்ன வேண்டும் என்று நிபுணர்கள் வழங்கும் ஆலோசனைகளை காணலாம்

உடல், மன மற்றும் சமூக ஆரோக்கியத்தில் அதிகப்படியான ஸ்க்ரீனிங் டைம் தாக்கங்களை ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு, ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

கேமிங்கிற்கு அடிமையாதவற்கு முன்கூட்டியே தீர்வு காண்பது, உங்கள் குழந்தைக்கு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த உதவும்

வீடியோ கேம்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே விளையாட வேண்டும் என, குழந்தைகளுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும்

தினசரி சில பணிகளை செய்ய வேண்டும் என்று திட்டம் தயாரித்து கொடுங்கள்.அதில் பல்வேறு செயல்பாடுகளுக்கு என ஒதுக்கப்பட்ட நேர விவரங்கள் இடம்பெற வேண்டும்

வீடியோ கேம்களால் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சினைகளை குறைக்க 20-20-20 விதியை பயன்படுத்துங்கள்

அதன்படி, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20-வினாடி பிரேக் எடுத்து 20 அடி தூரத்தில் உள்ள ஒன்றைப் உற்று பார்க்க வேண்டும்

குழந்தைகள் ஸ்க்ரீனிங் அல்லாத செயல்களில் ஈடுபட்டால் அதை ஊக்கப்படுத்துங்கள். வெளிப்புற விளையாட்டுகள் அல்லது பிற குழு நடவடிக்கைகளை ஊக்குவியுங்கள்

கேமிங்கிற்கு அடிமையாவதற்கான அறிகுறிகளை நீங்கள் கண்டால், மன நல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்து செல்லுங்கள்

ஆசிரியர்கள், வல்லுநர்கள் வெளிப்படுத்திய கருத்துகள், நம்பிக்கைகள் மற்றும் பார்வைகளின் தொகுப்பே இங்கு விவரிக்கப்பட்டுள்ளது