பூண்டு - இதை ஃப்ரிட்ஜில் வைத்தால் அது முளைத்துவிடும் வாய்ப்பு அதிகம். அதனால் வெளியே வைக்க வேண்டும்.



தக்காளி - இதை ப்ரிட்ஜில் வைப்பதால் அதன் கெமிக்கல் தன்மையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.



பிரெட் - இதை காற்றுப்புகாத டப்பாக்களில்தான் வைக்க வேண்டும், ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.



தர்பூசணி உள்ளிட்ட மெலன் வகை பழங்களை வைக்க கூடாது. அதிலுள்ள சத்துக்கள் அழிந்துவிடும்.



காஃபி, காஃபி பவுடர் உள்ளிட்டவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஈரப்பதம் அதன் தன்மையை மாற்றிவிடும்.



வாழைப்பழம் - இதன் சத்துக்கள் அப்படியே கிடைக்க ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.



வெங்காயத்தை அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே சிறந்தது,



வெள்ளரிக்காய் - இதில் உள்ள சத்துக்கள் ஃப்ரிட்ஜில் வைப்பதால் பாதிக்கப்படலாம்.



உருளைக்கிழங்கு - கிழங்கு வகைகளில் சிலவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. ஈரப்பதம் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றிவிடும்.



பேசில் - திருநீற்றுப்பச்சிலை உள்ளிட்ட ஹெர்பல் உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.