இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் இந்தியர்களுக்கான RDA அறிக்கையின்படி, பெரியவர்களுக்கு கால்சியத்தின் உயர் மதிப்பு 600 mg/d -
இது தோராயமாக இரண்டு கிளாஸ் பால் மற்றும் 10 க்கு 800 mg/dl ஆகும்.
பாலில் உள்ள ஆரோக்கியமற்ற கொழுப்பின் அளவு இதய நோய், கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நாள்பட்ட நோய்க்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான பால் உட்கொள்வது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் குடலில் இருந்து புரத இழப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
அதிக அளவு லாக்டோஸ், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சில ஹார்மோன்கள் காரணமாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
ஒரு கப் பாலில் (250 மில்லி) சுமார் 180 கலோரி இருக்கிறது. பாலின் அதிகப்படியான நுகர்வு, குறிப்பாக முழு கொழுப்புள்ள பால் உடலுக்கு நல்லதல்ல.
நூறு கிராம் பசும்பாலில் 67 கலோரிகள் உள்ளது, ஆனால் எருமைப் பாலில் 117 கலோரிகள் உள்ளது.
கொழுப்பைப் பொறுத்தவரை பசும்பாலில் 4.1, எருமைப் பாலில் 6.5. எனவே எருமைப்பாலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன"
பால் என்பது அஜீரணக் கோளாறுகளுடன் நேரடி தொடர்புடையது. சிலருக்கு லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருக்கும்.
அளவோடு பால் அருந்துவதே சிறந்தது. ஒரு டம்ளர் என இருக்காலாம். இது பொதுவான தகவல் மட்டுமே!