சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்!

Published by: விஜய் ராஜேந்திரன்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன

உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்

அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு

நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது

நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது

பொய் சொல்லி தப்பிக்காதே உண்மையை சொல்லி மாட்டிக்கொள்