தொலைபேசியில் எப்படி பேச வேண்டும்? எப்படி பேசக் கூடாது?

Published by: விஜய் ராஜேந்திரன்

நேரடியாக பேசுவதற்கும், தொலைபேசி மூலம் பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன

தொலைபேசியில் பேச துவங்கும்போது, வணக்கம் நலமாக இருக்கின்றீர்களா? போன்ற வாழ்த்துகளுடன் துவங்குங்கள்

பேச்சை துவங்கும்போதே பேசும் நபர் முக்கியமானவர் என்றால் வார்த்தையின் முக்கியத்துவத்தை உணர்ந்து பேச வேண்டும்

தொலைபேசியில் பேசும்போது உங்கள் குரல் தோனி குறித்து கவனமுடன் இருக்கவேண்டும்

போன் பேசும் போது உணவு உண்பது, தேநீர் பருகுவது, பத்திரிக்கை படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற வேலைகளை தவிர்த்து விடலாம்

பேசிக் கொண்டிருக்கும் இணைப்பை துண்டிப்பதற்கு முன் பக்கத்தில் இருக்கும் வேறு ஒருவருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும்

கேட்கின்றவர் புரிந்து கொள்ளும் மொழியில் தெளிவாக பேச வேண்டும்

வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தொலைபேசியில் பேசக்கூடாது. அவசியம் ஏற்பட்டால் வாகனத்தை நிறுத்திவிட்டு பேச்சை துவங்குங்கள்

கால் முடியும் வரை உங்கள் கவனம் உரையாடலை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்