தண்ணீர் உடல் எடையை குறைக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? நம் உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே முதன்மையான ஆரோக்கிய அறிவுரை தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பதை பலரும் நம்புகின்றனர் ஆனால் உண்மையில் தண்ணீருக்கு அந்த குணம் கிடையாது தண்ணீருடன் மூலிகைகளையோ வேறு பொருட்களை சேர்க்கும் போதோ உடல் எடை குறையலாம் மேலும் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் நிச்சயம் குடிக்க வேண்டும் என்றும் கூறுவார்கள் ஆனால் அது அவசியம் அல்ல, உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடித்தாலே போதுமானது மேலும் தண்ணீர் குடிப்பதால் பசி கட்டுப்படும் என்றும் சொல்வார்கள். அதுவும் உண்மை இல்லை தண்ணீர் அதிகம் குடிப்பதால் உட்கொள்ளும் உணவின் அளவு குறையும் குறைவான கலோரிகள் உட்கொள்வதால் உடல் எடை குறையலாம்