மருந்துகள், உணவுகள், எண்ணெய்கள் மற்றும் லோஷன்கள் காலாவதி தேதி உள்ளது. உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி உள்ளதா? என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்
உள்ளாடைகளை முறையாகப் பயன்படுத்துவது, தனிப்பட்ட சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
ஒரு உள்ளாடையை எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என்பதை கணக்கில் கொள்ளுங்கள்
ஒவ்வொரு ஆண்டும் உள்ளாடைகள் மொத்தமாக மாற்றி, பழையவற்றை களைவது ஆரோக்கியத்திற்கு நல்லது
உள்ளாடைகள் பழையதாக இருந்தால், அதை அணியாமல் இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது
உள்ளாடைகளை துவைத்தாலும் துர்நாற்றம் வீசினால் அல்லது துணி மங்கி இருந்தால் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது
தினமும் பயன்படுத்தும் டவல்கள் மற்றும் ப்ராக்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
முகத்திற்கும் உடலுக்கும் ஒரே டவலைப் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் உள்ள அனைவரும் ஒரே டவலை பயன்படுத்தக்கூடாது