உண்ணும் உணவு மூளையின் ஆரோக்கியத்திற்கும் உதவும். அதுவும் தேர்வு எழுத உள்ளோருக்கு டயட் முகவும் அவசியம். பால், தயிர், யோகர்ட், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் புரதம் நிறைந்தது. மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும். முட்டை மூளையின் செயல்திறன் அதிகரிக்க உதவும். மீன்,இறால் உள்ளிட்ட கடல்சார் உணவுகளை டய்ட்டில் சேர்க்கலாம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் தூக்கமும் மிகவும் முக்கியம். வேர்க்கடலை, Peanut Butter எனர்ஜி வழங்கும். நட்ஸ் வகைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. தேர்வு நேரத்தில் நினைவு ஆற்றலை வழங்க உதவும். பொட்டாசியம், ஜிங்க் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்த உணவு ஓட்ஸ். காய்கறி டய்ட்டில் இருப்பது ஆரோக்கியத்துடன் படிக்க உதவும். பீன்ஸ் அதிகமாக சாப்பிடலாம். முழு தானியங்கள் வைட்டமின் பி உள்ளிட்ட சத்துக்களை கொண்டுள்ளன. கீரை வகைகள் அவ்வளவு சத்து நிறைந்தவை. டயட்டில் இருக்கட்டும்.