பலருக்கும் சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள அதிக ஆவல் இருக்கும் சிலர் இயற்கை முறையை பின்பற்றி சருமத்தை பராமரித்து வருவார்கள் சிலர் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள் சில செயற்கை பொருள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் இப்போது அனைவராலும் செய்யக்கூடிய இயற்கை ஃபேசியல் பற்றி பார்ப்போம் சிறிதளவு தேங்காய் எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சி, அதை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம் 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். காலையில் குளிக்கும் முன் இதை செய்யலாம் கற்றாழை ஜெல்லில் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவலாம் முகம் மட்டுமல்லாமல் கழுத்து பகுதியிலும் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவலாம் சரும பிரச்சினை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்