வீட்டில் வண்டு, ஈ, கொசு, சிலந்தி அண்டாமல் இருக்க இதை செய்யுங்க!

1. சிலந்திகளுக்கு சிட்ரஸ் பழங்களில் வாடை சேராது

அதனால் வீட்டை துடைக்கும் நீரில் சிட்ரஸ் எண்ணெயை சேர்த்து, தரையை துடைக்கவும்

2. கொதிக்கும் சூடான நீரை சிங்கில் ஊற்றி விடவும்

இப்படி செய்தால் பழங்களில் மொய்க்கும் ஈயும் அதன் முட்டைகளும் அழிந்து போகும்

3. மீதமுள்ள காஃபி பவுடரை வீட்டில் இருக்கும் செடியின் தொட்டிகளில் சேர்க்கலாம்

இது பூச்சிகளையும் விரட்டும், செடிகளையும் வளர செய்யும்

4. கொசுக்களுக்கு காஃபி வாடை ஆகாது. தண்ணீரில் காஃபி மற்றும் கிராம்பையும் கொதிக்க வைக்கவும்

இப்படி செய்தால் கொசுக்கள் உங்க வீட்டு பக்கமே வராது

5. காட்டன் பஞ்சில், பெப்பர் மிண்ட் ஆயிலை தொட்டு எடுத்துக்கொள்ளவும்

இந்த பஞ்சை ஜன்னல், கதவுகளின் ஓரத்தில் தடவினால் பூச்சிகள் அண்டாது