இஞ்சி அல்லது சுக்கு.. இதில் எது பெஸ்ட்?

Published by: விஜய் ராஜேந்திரன்

ஃபிரெஷ்ஷான இஞ்சியானது காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் நாம் சகஜமாக பார்க்கும் இஞ்சி இது பதப்படுத்தப்படாதது

காரமான சுவை கொண்ட ஃபிரெஷ்ஷான இஞ்சியில் வைட்டமின்கள், மினரல்ஸ்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது

அதே போல ஃபிரெஷ்ஷான இஞ்சியில் காணப்படும் முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று ஜிஞ்சரால் (Gingerol) ஆகும்

உலர வைக்கப்படாத இஞ்சியில் அதிக அளவு வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியத்தை பராமரிக்க, செரிமானத்தை சிறப்பாக வைக்க, ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைக்க இந்த ஊட்டச்சத்துக்கள் அவசியம்

சுக்கு என்று குறிப்பிடப்படும் உலர்ந்த இஞ்சியானது ஃபிரெஷ் இஞ்சியை விட அதிக செறிவூட்டப்பட்ட சுவை கொண்டது

உலர்ந்த வேரை நன்றாக தூளாக அரைப்பதன் மூலம் உலர் இஞ்சிப்பொடி தயாரிக்கப்படுகிறது

சுக்கு தயாரிக்க செய்யப்படும் உலர்த்தும் செயல்முறையில் ஃபிரெஷ் இஞ்சியில் இருந்து அதன் நீர் உள்ளடக்கம் அகற்றப்படும்

இஞ்சி மற்றும் உலர் இஞ்சி இரண்டிலுமே ஆரோக்கிய நன்மைகள் அடங்கி உள்ளன. இரண்டில் எதை தேர்வு செய்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்