சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் குளிர்ச்சியான பானங்கள்! வெள்ளரிக்காயில் ஒரு கைப்பிடி அளவு புதினா இலைகளை சேர்த்து, அதனுடன் தேன் சேர்க்கலாம் இந்த கலவையை வடிகட்டி ஐஸ்கட்டி சேர்க்கலாம், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பருகலாம் தர்பூசணி சாறில் புதினாவை சேர்த்து மென்மையாக கலக்கி சாப்பிடலாம் மேலும் புத்துணர்ச்சிக்காக துளிராக இருக்கும் துளசி இலைகளை சேர்க்கலாம் அன்னாசிபழத்தை தேங்காய் நீருடன் சேர்த்து குடிக்கலாம் இந்த கலவை உங்கள் தாகத்தை தணித்து, சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவலாம் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து குடிக்கலாம் இதில் சியா விதையை போட்டு 12-15 நிமிடங்கள் ஊற வைத்து குடிக்கலாம் உங்களுக்கு பிடித்த பெர்ரி வகையை பாதாம் பால் அல்லது தேங்காய் நீருடன் சேர்த்து குடிக்கலாம் பெர்ரி மற்றும் தேங்காய் நீர் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவலாம்