மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன நாய் கடி காயங்களின் மீது தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும் சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும் காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும் மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும் அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும் முகத்தில் கடித்தால் உடனடியாக வைரஸ் மூளைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் நாய் கடி காயங்களுக்கு தையல் போட மாட்டார்கள் காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்