குழந்தைகளுக்கு தாயின் சேலையில் ஏன் தொட்டில் கட்டுகின்றனர்?



கர்ப்பிணிப் பெண் அசையும் போது வயிற்றில் அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் தொட்டில் அசைவுகள் போல் இருக்குமாம்



பிறந்த பின் தொட்டிலில் இருக்கும் குழந்தை தாயின் அசைவுகளை அதில் உணர்ந்து ஆழ்ந்த உறக்கம் கொள்ளுமாம்



இது குழந்தைகளுக்குக் கழுத்து வலி வராமல் முதுகுத்தண்டை பாதுகாக்கும் என சொல்லப்டுகிறது



தாயின் புடவையில் தாயின் தனிப்பட்ட வாசனை இருக்கும், இது குழந்தைக்கு ஆறுதல் அளிக்குமாம்



தாயின் புடவையானது தாயின் அன்பு மற்றும் பாதுகாப்பான உணர்வை அளிக்குமாம்



புடவை துணி மிகவும் மென்மையானது, குழந்தையின் நுண்ணிய தோலுக்கு ஏற்றதாகும்



தொட்டிலில் குழந்தையை இட்டு ஆட்டும்போது குழந்தைக்கு ஜீரணக் கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடுமாம்