நாம் வீட்டில் பருப்புகளை வாங்கி ஸ்டோர் செய்து வைப்போம் இந்த பருப்புகள் 3 வாரங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் வண்டு வந்து விடும் பருப்பில் வண்டு வராமல் இருக்க, பருப்பு டப்பாவில் 4 துளி நல்லெண்ணெய் சேர்க்கவும் எண்ணெய் அனைத்து பருப்புகளிலும் படும்படி கைகளால் கலந்து விட்டு, நன்கு குலுக்கி விடவும் இப்போது டப்பாவை மூடி வைத்து விடவும். நீண்ட நாட்களுக்கு இந்த பருப்பில் வண்டு வராது அரை கிலோ பருப்பிற்கு 4 துளி நல்லெண்ணெய் சேர்த்தால் போதுமானது அதிகமாக பருப்பு எடுத்தால் அதற்கேற்ற அளவில் எண்ணெய் துளிகளை சேர்க்கவும்