மாறிவரும் பருவம் நமது சருமத்தை வறட்சி அடைய செய்கிறது ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தலாம் தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு, வெங்காயம், தேன், தயிர் தோலை அகற்றிய பின் உருளைக்கிழங்கை அரைக்க வேண்டும் தேவையான அளவு வெங்காயத்தை கழுவி அரைத்துக்கொள்ளவும் அரைத்த உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் நன்கு கலக்க வேண்டும் கலவையில், தயிர் மற்றும் தேன் சேர்த்து அவற்றையும் நன்கு கலக்கவும் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவவும் சரும அழகை மேம்படுத்துவதோடு ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவும் வெங்காயம் பிடிக்கவில்லை என்றால் உருளைக்கிழங்குடன் தேன், எலுமிச்சை சாறு, தயிர் சேர்க்கவும்