தயிர் சாதம் மட்டுமல்ல.. தயிரை வைத்து பல ரெசிபிகளை செய்யலாம்!



வெயில் காலம் என்றாலே நம்மில் பலர் தயிரைதான் தேடுவோம்



ஆரோக்கியமான இந்த உணவை பல வகைகளில் எடுத்துக்கொள்ளலாம்



சாதத்துடன் தயிர், உப்பு, தாளித்த கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து சாப்பிடலாம்



தயிருடன் வாழைப்பழம், பெர்ரி அல்லது மாம்பழம் சேர்த்து ஸ்மூத்தியாக குடிக்கலாம்



சாலட் வகைகளை கோட் செய்ய தயிரை பயன்படுத்தலாம். இதன் சுவையை கூட்ட சிறிது மசாலா சேர்க்கலாம்



வெள்ளரி, கேரட், வெங்காயம் போன்ற காய்கறிகளை தயிருடன் கலந்து சாப்பிடலாம்



பேன் கேக், வாஃபிள் போன்ற இனிப்பு வகைகளிலும் தயிரை பயன்படுத்தலாம்



குழம்பு வகைகளின் திக்னஸை அதிகரிக்கவும் சுவையை கூட்டவும் தயிரை பயன்படுத்தலாம்



வயிற்றை குளிர்விக்க கெட்டியான தயிரில் தண்ணீர் ஊற்றி மோராகவும் எடுத்துக்கொள்ளவும்