தயிர் புளிக்காமல் இருக்க அதில் நசுக்கிய இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது
வெந்தயக்கீரை, புதினா, துருவிய முள்ளங்கி சேர்த்து செய்யும் சப்பாத்தியில் பச்சை வாசனை வரும். இவற்றை சில நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பிறகு மாவில் சேர்த்தால் ருசி கூடும்
கீரையை பருப்புடன் சேர்த்து செய்யும் போது தக்காளி புளி சேர்க்காமல் நெல்லிக்காய் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்
மீன் சமைத்த பாத்திரத்தில் வாடை இருந்தால் சீயக்காய் தூளையும் புளியையும் சேர்த்து பாத்திரத்தை துலக்கினால் வாடை போய்விடும்
ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ரசத்தை கொதிக்க விட்டு மிளகு சீரகத்தூள் சேர்த்து அரை மூடி எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் உப்பின் அளவு குறைந்துவிடும்
வெண்ணெயை முட்டையில் கலந்து நன்றாக கலக்கி ஆம்லெட் செய்தால் ருசியாக இருக்கும்