பணியிடத்தில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை! பணிபுரியும் அலுவலகத்திற்கு ஏற்ப ட்ரெஸ் செய்து கொள்வது அவசியம் அலுவலகத்திற்கு அடிக்கடி தாமதமாக செல்லக்கூடாது நிறுவன கலாசாரத்தை புறக்கணிக்க கூடாது பொருட்களை அழகாக அடுக்கி சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம் மேலதிகாரிகளுடன் குறிப்பிட்ட எல்லைக் கோட்டை மீறாமல் நடந்து கொள்வது மிகவும் அவசியம் சக ஊழியர்களுடன் விவாதம், வாக்குவாதம் ஏற்படும்போது பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம் எந்த விஷயத்திலும் பொறுப்பில்லாமல் அக்கறையில்லாமல் இருப்பது மிகவும் தவறு சக பணியாளர்களுக்கு தேவைப்பட்ட உதவிகளை மனமுவந்து செய்ய வேண்டும் அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டையும், வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தையும் நினைக்கக் கூடாது