தாய்பால் கட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்

Published by: விஜய் ராஜேந்திரன்

இளம் தாய்மார்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினை மார்பில் பால் கட்டிக்கொள்வது



அதை தவிர்க்க இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பால் கொடுக்க வேண்டும்



ஒரு பக்கம் மட்டும் தாய்ப்பால் கொடுத்தால் மற்றொரு பக்க மார்பகத்தில் பால் கட்டிக் கொண்டு வலி ஏற்படும்



லேசாக வீங்கி இருந்தாலும், அதை மசாஜ் செய்வதன் மூலமும் சரி செய்யலாம்



தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளால் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள்



ஒரு பக்கமாக படுத்து உறங்கினால் எளிதில் பால் கட்டிக்கொள்ளாது



மார்பகத்தில் எங்கு தாய்ப்பால் கட்டி இருக்கிறதோ அங்கு மல்லிகைப்பூக்களை வைத்து கட்டலாம்



இதை அடிக்கடி செய்யக்கூடாது அப்படி செய்தால் தாய்ப்பால் சுரப்பு குறைந்துவிடுமாம்



சூடான தண்ணீரில் டர்க்கி டவலை நனைத்து இளஞ்சூடாக மார்பகங்களில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்



ஐஸ் கட்டியை எடுத்து மார்பகத்தில் மிதமாகத் தேய்த்து ஒத்தடம் கொடுக்கலாம்



மார்பகங்களில் எந்த விதமான கிரீம், மருந்துகள் தடவ கூடாது