வெயில் காலத்தில் பழங்கள் காய்கறிகளை எப்படி சாப்பிட வேண்டும்



வெயிலில் தலைகாட்ட முடியாமல் பலரும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள்



சிலருக்கு உடல் உஷ்ணம், செரிமான கோளாறு, தலைவலி மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன



தர்பூசணி, வெள்ளரி, முலாம் பழம் ஆகியவற்றை பழமாகவோ, சாலடாகவோ, பழச்சாறாகவோ சாப்பிடலாம்



பூசணி வகை பழங்களில் 95 சதவீத நீர்ச்சத்து உள்ளது



செரிமான கோளாறு, சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது



உடல் புத்துணர்ச்சியாக இருக்க தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடலாம்



மாம்பழம் உடலுக்கு உடனடி சக்தி தரும் என்றாலும், அதை அதிக அளவில் எடுத்துக்கொள்ள கூடாது



சோற்றுக் கற்றாழை சாறு, நீர் மோர், எலுமிச்சை சாறு குடிக்கலாம்



பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகள் மற்றும் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்



வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்