மா, பல, வாழை ஆகிய முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பலருக்கும் பிடிக்கும் கோடைக்காலம் வந்தாலே மாம்பழதின் சீசன் ஆரம்பித்து விடும் மாம்பழத்தை பழமாகவோ, ஜூஸாகவோ, ஸ்மூத்தியாகவோ சாப்பிடலாம் இப்போது இந்தியாவில் கிடைக்கும் சிறந்த மாம்பழ வகைகளை பற்றி பார்க்கலாம்.. மாம்பழத்தின் ராஜா என்று அழைக்கப்படும் அல்போன்சோ மாம்பழத்தில் விதமான இனிப்பு சுவை இருக்கும் இந்தியாவில் அல்போன்சோ மாம்பழத்திற்கு அடுத்தப்படியாக கேசர் மாம்பழம் உள்ளது மற்ற மாம்பழ வகைகளை விட துசேரி மாம்பழத்தில் நார்ச்சத்து குறைவாகவும், சாறு அதிகமாகவும் இருக்கும் நீலம் மாம்பழத்தின் அளவு சிறியதாக இருந்தாலும் அதன் வாசனை இனிமையாக இருக்கும் லாங்ரா மாம்பழ வகை மிகவும் மென்மையாக இருக்கும் இந்தியாவில் வட மாநிலங்களில் காணப்படும் சௌசா மாம்பழமும் சூப்பராக இருக்கும்