யாரெல்லாம் முகத்திற்கு வைட்டமின் இ கேப்சூல் பயன்படுத்தலாம்..?



வைட்டமின் இ கேப்சூல்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல நன்மைகளை தர வல்லது



இதனை கரும்புள்ளி, முகத்தில் கருமை போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்



வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த கேப்சூலை வெட்டி அந்த எண்ணெய்யை முகத்தில் தடவி பின்னர் கழுவலாம்



மேலும் இக்கேப்சூலை ஜோஜோபா அல்லது பாதாம் எண்ணெயுடன் கலந்தும் முகத்தில் தடவலாம்



கூடுதலாக தேன், அவகாடோ போன்றவற்றுடன் சேர்த்து மாஸ்க்காகவும் தடவலாம்



முகப்பருக்கள் மற்றும் ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் வாரத்தில் 1-2 முறை இக்கேப்சூலை பயன்படுத்தலாம்



வறண்ட சருமம் உள்ளவர்கள் தினமும் இந்த கேப்சூலை தடவி வர சருமம் பொலிவுறும் என்று கூறப்படுகிறது



தூங்கும் முன் முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து காலையில் கழுவலாம்



உங்கள் சரும ஆலோசகருடன் கலந்து ஆலோசித்துவிட்டு இந்த கேப்சூலை பயன்படுத்துவது நல்லது