ஆரஞ்ச் நிற பரங்கிக்காயைவிட வெள்ளை நிற பரங்கிக்காயில் இனிப்புச்சுவை அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் (பி1, பி2, பி3, பி5, பி6 மற்றும் பி9) மேலும் கால்சியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அதிக நார்ச்சத்து நிறைந்தது. குறைந்த கலோரிகள் உள்ளதால் செரிமான திறனை மேம்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம். நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது உடலிலுள்ள நச்சுகளை வெளியேற்றும்.