தேனில் ஊறவைத்த பூண்டு.. வெறும் வயிற்றில் சாப்பிட்டு பாருங்க!



பூண்டில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம்



பூண்டில் உள்ள அல்லிசின் என்ற தனிமம், கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்



செலினியம், நார்ச்சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம்



ஆர்கானிக் தேன், இயற்கையாகவே இனிப்பாக இருக்கும். இது, செரிமானத்திற்கு உதவுகிறது



பூண்டு, தேன் ஆகியவற்றின் நன்மை, ஒருசேர கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்



தேவையான அளவு பூண்டை எடுத்து உரித்து கொள்ள வேண்டும்



ஒரு கண்ணாடி குடுவையை சுத்தம் செய்து அவற்றில் பூண்டுகளை நிறப்பி, தேன் ஊற்ற வேண்டும்



தேன் ஊற்றும் போது ஏற்படும் குமிழ்களை அகற்ற ஒரு கரண்டியை பயன்படுத்தவும்



இதில் இருக்கும் பூண்டை, தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்



ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இதை எடுத்துக்கொள்ளவும்