மஞ்சள் பூசணி என்றழைக்கப்படும் பரங்கிக்காயில் இனிப்புச்சுவை அதிகம் உள்ளது.
இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி-காம்ப்ளக்ஸ் (பி1, பி2, பி3, பி5, பி6 மற்றும் பி9 உள்ள வகைகள்) நிறைந்துள்ளன.
பரங்கிக்காய் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்தது. வாரத்தில் இரண்டு முறை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கின்றனர்.
அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ளது.அதிக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை சாப்பிடலாம்.
குறைந்த கலோரி கொண்டது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமான பாதுகாக்க உதவும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
பரங்கிக்காய் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது.
ஊட்டச்சத்து நிறைந்த பரங்கிக்காய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.